எபோலா தொற்று பற்றிய போதிய தெளிவின்மை : கட்டுப்படுத்துவதில் சிரமம்!
காங்கோ ஜனநாயகக் குடியரசின் மையப் பகுதியில் வாழும் மக்கள் எபோலா வைரஸ் பற்றிய போதிய விளக்கத்தை கொண்டிராதமையால் நோயை கட்டுப்படுத்துவதில் பாரிய சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
ActionAid DRC நடத்திய மதிப்பாய்வு ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அங்கு வசிப்பவர்களில் 64 சதவீதம் பேர் மட்டுமே எபோலா உண்மையானது என நம்புவதாக தெரியவந்துள்ளது. ஏனையோர் அதனை பொய்யாக கருதுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே குறித்த வைரஸ் பரவல் காரணமாக இதுவரை 200இற்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதேபோல் ஏறக்குறைய 1000 இற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.




