உலகம் செய்தி

ஆப்பிரிக்க குடிமக்கள் கனடாவிற்குள் பிரவேசிக்க தடை!

எபோலா வைரஸ் பரவும் அபாயம் காரணமாக, மூன்று ஆப்பிரிக்க நாடுகளின் குடிமக்ககள் கனடாவிற்குள் பிரவேசிக்க தற்காலிகமகா தடை விதிக்கப்பட்டுள்ளது

அதன்படி, காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளின் குடிமக்கள் இன்று முதல் 90 நாட்களுக்கு கனடாவிற்குள் நுழைய தடை விதிக்கப்படுவார்கள்.

கனடவால் எபோலா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸின் புண்டிபுக்யோ (Bundibugyo) வகை ஒரு தேசிய பெருந்தொற்றாக உருவெடுக்கும் அபாயம் “மிக உயர்ந்த” நிலையை எட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிவித்தது.

இதற்கிடையில், கடந்த சில வாரங்களில் இந்த மூன்று நாடுகளுக்கும் பயணம் செய்த அமெரிக்கர் அல்லாத குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு கடந்த வாரம் அமெரிக்காவும் தடை விதித்தது.

இருப்பினும், பாதிக்கப்பட்ட இந்தப் பகுதிகளில் இருந்தும் அறிகுறிகள் வெளிப்படாத கனடிய குடிமக்கள்,  மற்றும் பிற வெளிநாட்டவர்கள் மே 30 முதல் 21 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊடகங்களின்படி, அமெரிக்கா, கனடா அல்லது பஹாமாஸில் எபோலா பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!