ஐரோப்பா

இங்கிலாந்தை உலுக்கும் வெப்ப அலை : 04 சிறுவர்கள் பலி!

இங்கிலாந்தில் கடுமையான வெப்பநிலை பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் நீரில் குளிக்கச் சென்ற நான்கு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு லண்டனின் கியூ கார்டன்ஸில் 34.8°C என்ற மிக உயர்ந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல் தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் 36°C  வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அதிக வெப்பம் காரணமாக மக்கள் நீர் நிலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அவ்வாறு நீரில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி என நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த சாதனை அளவிலான வெப்பநிலையைத் தொடர்ந்து, இன்று  “கடுமையான” இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் ஆலங்கட்டி மழைக்கான மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!