இலங்கையில் மீண்டும் work from home?
அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் ‘work from home ’ சிஸ்டம் பற்றி எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
பொருளாதார நிலை மற்றும் எரிபொருள் சேமிப்பு என்பவற்றைக் கருத்திற்கொண்டு ‘work from home’ சிஸ்டம் பற்றி அமைச்சரவையில் ஆராயப்பட்டதா என கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
“ இது பற்றி அமைச்சரவையில் பேசப்படவில்லை. அது பற்றி அரசாங்கத்துக்குள் கலந்துரையாடப்படவில்லை.” – என்றார்.
அதேவேளை, எரிபொருள் விலையேற்றம் இடம்பெறுமா என எழுப்பட்ட கேள்விக்கு,
“ பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்னும் தெரியப்படுத்தவில்லை.” எனக் குறிப்பிட்டார் அமைச்சர்.




