இந்தியா

காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – மோடி விடுத்த எச்சரிக்கை

  • April 23, 2025
  • 0 Comments

தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த துப்பாக்கிச் சூடு 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சுற்றுலாப் பயணிகள் குழுவை குறிவைத்து நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் ஒரு இந்திய கடற்படை அதிகாரி மற்றும் ஒரு புலனாய்வுப் பணியக அதிகாரியும் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் சமீப காலங்களில் நடந்த மிக மோசமான தாக்குதல் இதுவாகும் என்று கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் மற்றொரு குழுவினர் காயமடைந்தனர், அவர்களை வெளியேற்ற இராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட பகுதிக்கு வாகனங்களை […]

உலகம்

சர்வதேச அளவில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

  • April 23, 2025
  • 0 Comments

சர்வதேச அளவில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 64.28 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.05 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.019 அமெரிக்க […]

இலங்கை

இலங்கை கத்தோலிக்க திருச்சபை விடுத்த கோரிக்கை

  • April 23, 2025
  • 0 Comments

கொழும்பு அப்போஸ்தலிக்க தேவாலயம் இன்று முதல் 25 ஆம் திகதி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பாப்பரசரின் கொடியையோ அல்லது கத்தோலிக்க கொடியையோ கத்தோலிக்க சபை உள்ளிட்ட நிறுவனங்களில் அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கத்தோலிக்க திருச்சபை அனைத்து கத்தோலிக்கர்களையும் கோரியுள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தேசிய கத்தோலிக்க வெகுசன தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜுட் கிரிசாந்த பெர்னாண்டோ இதனைத் […]

செய்தி

புனித பேதுரு பேராலயத்தில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் தேகம்

  • April 23, 2025
  • 0 Comments

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் தேகம் இன்றைய தினம் வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்திற்குக் கொண்டுவரப்படவுள்ளதாக வத்திக்கான் திருச்சபை அறிவித்துள்ளது. தற்சமயம் பாப்பரசரின் தேகம் காசா சண்டா மார்தா இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது இறுதிச் சடங்கு எதிர்வரும் சனிக்கிழமை ரோமில் உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்காவில் நடைபெறவுள்ளது. நேற்றுமுன்தினம் (21) வத்திக்கான் நேரப்படி காலை 7:35 அளவில் தமது உத்தியோகபூர்வ இல்லத்தில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார். பக்கவாதம் மற்றும் மாரடைப்பு காரணமாக அவர் […]

உலகம் செய்தி

பிரேசிலில் பெண்ணின் மோசமான செயல் – ஈஸ்டர் சொக்லேட் முட்டைகளை சாப்பிட்ட சிறுவன் பலி

  • April 23, 2025
  • 0 Comments

பிரேசிலில் ஏழு வயது சிறுவன் விஷம் கலந்த ஈஸ்டர் சொக்லேட் முட்டைகளை சாப்பிட்டு உயிரிழந்தார். ஒரு பிரேசிலியப் பெண் தனது முன்னாள் துணையின் புதிய காதலிக்கு இந்த விஷ ஈஸ்டர் முட்டைகளை அனுப்பியுள்ளார். விசாரணைகளில், சம்பந்தப்பட்ட 35 வயது பெண் பழிவாங்கும் நோக்கில் இதைச் செய்ததாக தெரியவந்துள்ளது. இந்தப் பார்சல் ஒரு மோட்டார் சைக்கிள் கூரியர் சேவையால் அனுப்பப்பட்டது, மேலும் அந்தப் பெண் அதை தொலைபேசி மூலம் பெற்றதை உறுதிப்படுத்தியிருந்தார். பார்சலைப் பெற்ற பெண் தனது குழந்தைகளுக்கு […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp அறிமுகம் செய்யும் புதிய வசதி

  • April 23, 2025
  • 0 Comments

ஆண்ட்ராய்டு யூசர்களை குறி வைத்து வாட்ஸ்அப் தற்போது எக்கச்சக்கமான புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த அம்சங்கள் போன் கால்கள் பேசும் பொழுது யூசர்களுக்கு கட்டுப்பாட்டை மேம்படுத்தவும், மீடியாக்களை ஷேர் செய்யும் பொழுது பிரைவசியை அதிகப்படுத்தவும் அறிமுகப்படுத்தப்படுகிறது. WABetaInfo -ன்படி, இந்த புதிய கருவிகள் ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப்பின் 2.25.10.16 பீட்டா வெர்ஷனில் தற்போது அறிமுகமாகியுள்ளது. ஒரு குறிப்பிட்ட அளவிலான யூசர்கள் இதனை தற்போது சோதித்து வருகின்றனர். அப்படி சோதனையில் இருக்கும் அம்சங்களில் ஒன்று இன்கமிங் வாய்ஸ் கால்களுக்கு […]

விளையாட்டு

கைவிட்ட அணியை பதிலடி கொடுத்த கே.எல்.ராகுல்! லக்னோ உரிமையாளர் அதிர்ச்சி

  • April 23, 2025
  • 0 Comments

கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம் இருந்து விரக்தியை பெற்றுக்கொண்டார் என்று சொல்லலாம். லக்னோ உரிமையாளர் அவரை கடுமையாக திட்டும்படியான புகைப்படங்களும் வெளியாகி மிகவும் வைரலானது. அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு அதாவது இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளின் மெகா ஏலத்தின் போது லக்னோ நிர்வாகம் கே.எல்.ராகுலை விடுவித்து ரிஷப் பண்டை ரூ.27 கோடி கொடுத்து கேப்டனாகிக்கியது. இந்த சூழலில், எப்போது லக்னோ அணிக்கும் […]

உலகம்

அமெரிக்க மாட்டிறைச்சி இறக்குமதிக்கு தடை விதித்த சீன அரசாங்கம்

  • April 23, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரி விதிப்புகளை அடுத்து அமெரிக்காவில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதியை சீனா அரசு நிறுத்தி உள்ளது. சீனாவின் உணவகங்களில் மிக பிரபல உணவாக இருந்த அமெரிக்க மாட்டிறைச்சி இனி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படாது என்று அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இதற்கு பதிலாக ஆஸ்திரேலியாவில் இருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்ய உள்ளதாக சீன இறக்குமதியாளர்கள் கூறியுள்ளனர்.

இலங்கை

இலங்கையில் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

  • April 23, 2025
  • 0 Comments

இலங்கையில் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும், இன்று காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, […]

ஆசியா

பாகிஸ்தானில் சுமார் 22 மில்லியன் யாசகர்கள் – 42 பில்லியன் ரூபாய் சம்பாதிப்பதாக தகவல்

  • April 23, 2025
  • 0 Comments

பாகிஸ்தானில் சுமார் 22 மில்லியன் யாசகர்கள் இருப்பதாகவும், அவர்கள் ஆண்டுதோறும் குறைந்தது 42 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய்களை சம்பாதிக்கிறார்கள் என்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் கூறியுள்ளார். யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வெளிநாடுகளில் நாட்டின் பிம்பத்திற்கு ஒரு கறை ஏற்பட்டுள்ளதென அவர் கூறுகிறார். பாகிஸ்தான் ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களிடையே தனது சொந்த ஊரான சியால்கோட்டில் உரையாற்றும் போது அந்நாட்டின் மத்திய பாதுகாப்பு அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டதாக ஊடக […]