இலங்கை கத்தோலிக்க திருச்சபை விடுத்த கோரிக்கை
Vatican flag on cloudy sky. waving in the sky
கொழும்பு அப்போஸ்தலிக்க தேவாலயம் இன்று முதல் 25 ஆம் திகதி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், பாப்பரசரின் கொடியையோ அல்லது கத்தோலிக்க கொடியையோ கத்தோலிக்க சபை உள்ளிட்ட நிறுவனங்களில் அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கத்தோலிக்க திருச்சபை அனைத்து கத்தோலிக்கர்களையும் கோரியுள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தேசிய கத்தோலிக்க வெகுசன தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜுட் கிரிசாந்த பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.
பாப்பரசருக்கான இரங்கலை வெளிப்படுத்துவதற்காகக் கொழும்பிலுள்ள இலங்கைக்கான வத்திக்கான் தூதரகத்தில் விசேட நினைவேடு ஒன்று வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.





