இந்தியாவுடனான மோதல் :சீனாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்தும் பாகிஸ்தான்
சீனாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்தப்போவதாகப் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.இருநாடுகளுக்கும் இடையிலான முதலீடு அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சண்டை மூண்டது.இந்தியாவின் காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குலில் 26 பேர் உயிரிழந்தனர்.இதை அடுத்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ மூலம் தகர்த்தது.நான்கு நாள்களுக்குப் பிறகு சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுடன் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது.இதை பாகிஸ்தான் மறுத்துவிட்டது. சண்டை […]













