உலகம்

அமெரிக்காவின் ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் – ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

  • June 9, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தியின் மீது பறந்த அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது. இதனை தொடர்ந்து இதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று இரவு ஹோர்முஸ் ஜலசந்தியில் ரோந்து சென்ற அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் ஒன்றே இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இதனை இயக்கிய இரு விமானிகள் ட்ரோன் படகு மூலம் மீட்கப்பட்டுள்ளனர். சுமார் 35 மில்லியன் முதல் 40 மில்லியன் டொலர் வரை மதிப்புள்ள அப்பாச்சி […]

ஐரோப்பா

லண்டனை உலுக்கிய கத்திகுத்து தாக்குதல் : புகலிடக் கோரிக்கையாளர் கைது!

  • June 9, 2026
  • 0 Comments

லண்டனில் நேற்று இரவு இடம்பெற்ற கத்திகுத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் சூடானை சேர்ந்த 30 வயதுடைய  நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவருக்கு முகம், கழுத்து மற்றும் முதுகில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய காணொளி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த வன்முறை சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ஸ்டாமர், இதனை வெறுக்கத்தக்க சம்பவம் என கண்டித்ததோடு, பாதிக்கப்பட்ட நபருக்கு ஆறுதல் கூறியுள்ளார். இதேவேளை இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் […]

உலகம்

நியூசிலாந்தில் புயல் நிலைமை : அவசரநிலை அறிவிப்பு!

  • June 9, 2026
  • 0 Comments

நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டனில் வீசிய புயல் காரணமாக இன்று விமான மற்றும் படகு சேவைகள் இரத்து செய்யப்பட்டன. மேலும் நியூசிலாந்து தலைநகரின் தெற்குக் கடற்கரையோர பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த மோசமான வானிலை காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் அவசரநிலையை அறிவித்தனர். வெலிங்டன் விமான நிலையத்தில் குறிப்பிடத்தக்க இடையூறுகள் ஏற்பட்டதாகவும், 08 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் பலத்த காற்றின் காரணமாக தரையிறங்கிய விமானம் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக […]

இலங்கை

18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!!

  • June 9, 2026
  • 0 Comments

லங்கா சதொச நிறுவனம் நாளை முதல் அமலுக்கு வரும் வகையில் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, பெரிய வெங்காயம், வெள்ளைச் சீனி, பருப்பு, தட்டைப்பயறு, கடலை, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, கோதுமை மா, சிவப்பு பச்சரிசி, சிவப்பு நாட்டரிசி, சம்பா அரிசி, வெள்ளை நாட்டரிசி, பொன்னி சம்பா உள்ளிட்ட 18 வகையான பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அரசாங்கத்தின் தலையீட்டுடன் விலை […]

இந்தியா செய்தி

G7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி!

  • June 9, 2026
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரான்ஸ் மற்றும் ஸ்லோவேக்கியா ஆகிய நாடுகளுக்கு செல்கின்றார். இவ்விஜயத்துக்காக எதிர்வரும் 13 முதல் 19 வரையான காலப்பகுதியை பிரதமர் மோடி ஒதுக்கியுள்ளார். ஜுன் 14-ம் திகதி பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனை , பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதன் மூலம் இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையிலான உறவை மேலும் வலுவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸ் விஜயத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, ஜுன் 15 ஆம் […]

உலகம்

பாலஸ்தீன மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடும் இஸ்ரேல்!

  • June 9, 2026
  • 0 Comments

காசாவின் மேற்கு கரையில் பாலஸ்தீன  மக்கள் மீதான தாக்குதலில் இஸ்ரேலிய அதிகாரிகள் நேரடியாக ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசாரணை ஒன்றில் தெரியவந்துள்ளது, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், தினந்தோறும் பாலஸ்தீனியர்களைக் கொன்று, காயப்படுத்தி, இடம்பெயரச் செய்யும் தாக்குதல் சம்பவங்களில் இஸ்ரேலிய அதிகாரிகள் நேரடியாக தொடர்புப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான வன்முறை சம்பவங்கள் 2023 ஆம் ஆண்டில் இருந்து 130 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் குடியேறிகளுடன் சென்று பாலஸ்தீன் மக்கள் மீது தாக்குதல்களை நடத்துகின்றனர். […]

ஐரோப்பா செய்தி

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறாதீர்: ஈரான், இஸ்ரேலிடம் பிரிட்டன் வலியுறுத்து!

  • June 9, 2026
  • 0 Comments

இஸ்ரேல், ஈரானுக்கிடையில் அதிகரித்துள்ள ராணுவ மோதல்கள் குறித்து பிரிட்டன் வெளிவிவகாரச் செயலர் Yvette Cooper கவலை தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் தற்காலிக போர்நிறுத்தத்தை மதித்து நடக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். “மீண்டும் ஒரு மோதல் வெடிப்பது யாருடைய நலனுக்கும் உகந்தது அல்ல. இதனை நேரடியாகத் தெரிவிப்பதற்காக நான் ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் பேசினேன்,” என்று அவர் நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் தெரிவித்தார். ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதை Yvette Cooper […]

உலகம்

போர் நிறுத்தங்கள் மதிக்கப்பட வேண்டும் – அன்டோனியோ குட்டெரெஸ்!

  • June 9, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் வன்முறை மீண்டும் அதிகரித்திருப்பது குறித்து தாம் “அதிர்ச்சி” அடைவதாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். காசாவிற்குள் செல்லும் எல்லைக் கடப்புகளை மீண்டும் திறக்குமாறும் அவர் இஸ்ரேலிடம் வலியுறுத்தியுள்ளார். “அனைத்துத் தாக்குதல்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் லெபனான், ஈரான் மற்றும் காசாவில் உள்ள போர் நிறுத்தங்கள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், காசாவிற்குள் செல்லும் எல்லைக் கடப்புகளை மூடுவதற்கான இஸ்ரேலின் முடிவு குறித்தும் நான் […]

உலகம் செய்தி

இஸ்ரேல் தாக்குதல்களில் லெபனானில் 3 மாதங்களுக்குள் 3.666 பேர் பலி!

  • June 9, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கிடையிலான போரால் லெபனானில் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரையில் 3,666 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 11,321 பேர் காயமடைந்துள்ளனர் என்று லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு, லெபனானில் இருந்து செயல்பட்டுவருகின்றது. இந்நிலையில் அவ்வமைப்பின் ராணுவ இலக்குகளை குறிவைத்து கடந்தகாலங்களில் இஸ்ரேல் உக்கிர தாக்குதல்களை நடத்தியது. லெபனான்மீதான இஸ்ரேலின் தாக்குதலால், இஸ்ரேல்மீது ஈரான் நேற்று தாக்குதல் நடத்தி இருந்தது. பின்னர் இஸ்ரேலும் பதிலடி கொடுத்திருந்தது. ட்ரம்பின் […]

அரசியல் இலங்கை செய்தி

சுரேஷ் சலேவுக்கு சித்திரவதை: அரசு மறுப்பு!

  • June 9, 2026
  • 0 Comments

சிஐடி தடுப்பு காவலின்கீழ் சுரேஷ் சலே சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார் என முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் அடியோடு நிராகரித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றார் என முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமைச்சரிடம் கேள்விகள் எழுப்பட்டன. இவற்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் , அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்தார். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் […]