இந்தியா செய்தி

G7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரான்ஸ் மற்றும் ஸ்லோவேக்கியா ஆகிய நாடுகளுக்கு செல்கின்றார்.

இவ்விஜயத்துக்காக எதிர்வரும் 13 முதல் 19 வரையான காலப்பகுதியை பிரதமர் மோடி ஒதுக்கியுள்ளார்.

ஜுன் 14-ம் திகதி பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனை , பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இதன் மூலம் இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையிலான உறவை மேலும் வலுவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ் விஜயத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, ஜுன் 15 ஆம் திகதி ஸ்லோவேக்கியாவுக்கு செல்வார்.

அந்நாடு விடுதலை (1993) பெற்ற பிறகு இந்திய பிரதமர் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணமாக இது அமைந்துள்ளது.

ஸ்லோவேக்கியாவின் பிரதமர், ஜனாதிபதி ஆகியோருடன், பிரதமர் மோடி இரு தரப்பு சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.

அதேவேளை, இதன்பின்னர் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் G7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்.

இதில் சர்வதேச அளவிலான பொருளாதார மீட்சி, உலக நாடுகளின் ஒற்றுமை மற்றும் பொறுப்பான AI பயன்பாடு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி