ஐரோப்பா செய்தி

மீண்டும் போர் வெடித்தால் பாரிய நெருக்கடி ஏற்படும்: EU எச்சரிக்கை!

  • June 8, 2026
  • 0 Comments

மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரையும் உடனடியாகப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவர் Kaja Kallas அழைப்பு விடுத்துள்ளார். சிலவேளை இந்தப் பதற்றம் முழுமையான போராக மாறினால், பிராந்தியம் முழுவதும் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். தற்போதைய சூழலில் அமைதிப் பேச்சுவார்த்தைகளும் தற்காலிக போர்நிறுத்தங்களும் மிகவும் பலவீனமாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். சைப்ரஸ் நாட்டின் நிகோசியாவில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர் , வன்முறையைத் தவிர்த்து அமைதி […]

உலகம் செய்தி

அமைதியை கடைபிடிக்குமாறு பாகிஸ்தான் அவசர வேண்டுகோள்!

  • June 8, 2026
  • 0 Comments

அமைதியை அடைவதற்குரிய இறுதி இலக்கு மிக அருகில் இருப்பதால், அனைத்துத் தரப்பினரும் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif கோரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையில் மீண்டும் போர் மூண்ட நிலையிலேயே , அமைதி பேச்சுக்கு மத்தியஸ்தம் வகிக்கும் பாகிஸ்தான் பிரதமர் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கிடையில் இஸ்ரேல் மீதான தனது தாக்குதல்களை நிறுத்திக்கொள்வதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. எனினும், லெபனான் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால் முன்பை விட மிகவும் கடுமையான முறையில் […]

இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

  • June 8, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், செப்டம்பர் 05 ஆம் திகதிவரை பரீட்சைகள் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயர் மட்டத் தேர்வுக்கான கால அட்டவணையை தேர்வுகள் திணைக்களம் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.

உலகம்

இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை : ஈரான் திடீர் மனமாற்றம்!

  • June 8, 2026
  • 0 Comments

இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு வந்ததாக ஈரானின் கூட்டு இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. இஸ்ரேல் மேலும் ஏதேனும் “ஆக்கிரமிப்பு மற்றும் விரோதச் செயல்களை” மேற்கொண்டால், “முன்பை விட மிகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான முயற்சிகளைச் சீர்குலைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய சமீபத்திய தொடர் தாக்குதல்களுக்குப் பிறகு, இஸ்ரேலும் ஈரானும் “உடனடியாகத் துப்பாக்கிச் சூட்டை நிறுத்த வேண்டும்” என்று டொனால்ட் ட்ரம்ப் கூறியதை தொடர்ந்து இந்த […]

இலங்கை செய்தி

சொல்லிசைப் பாடகருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

  • June 8, 2026
  • 0 Comments

“பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சங்கீத்ஷனைப் பொதுமன்னிப்பின் அடிப்படையிலோ அல்லது கருணை அடிப்படையிலோ ஜனாதிபதி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சங்கீத்ஷனை இன்று நேரில் சென்று பார்வையிட்டு, நலம் விசாரித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், “சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள […]

இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி யாழில் போராட்டம்!

  • June 8, 2026
  • 0 Comments

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீத்ஷனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி இன்று முற்பகல் வல்வெட்டித்துறைச் சந்தியில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வல்வெட்டித்துறையின் சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் போராட்டத்தின்போது பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்திருந்த சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களை, நேற்று வல்வெட்டித்துறைப் பொலிஸார் நேரில் அழைத்து கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியிருந்தனர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

லாட்வியாவில் மீண்டும் ட்ரோன் அச்சுறுத்தல் : அச்சத்தில் பால்டிக் நாடுகள்!

  • June 8, 2026
  • 0 Comments

ரஷ்ய பகுதியில் இருந்து வந்த  ட்ரோன் ஒன்று லாட்விய வான்வெளிக்குள் நுழைந்த நிலையில்  அதனை நேட்டோ படைகள் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளனர். ட்ரோட் ஊடுறுவலைத் தொடர்ந்து லாட்வியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மக்கள் வீட்டின் உள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். ட்ரோன்   செயலிழக்கச் செய்யப்பட்ட பிறகு அந்த எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டது. ட்ரோனின் தோற்றம் தற்போது தெரியவில்லை என்றாலும், உக்ரைன் சமீபகாலமாக ரஷ்யா மீதான நீண்ட தூர ட்ரோன் தாக்குதல்களை அதிகரித்துள்ளது. அவற்றில் சில பால்டிக் நாடுகளின் வான்வெளிக்குள் […]

இலங்கை செய்தி

இலங்கையிலிருந்து விடைபெறும் சுவிஸ் தூதுவர் வடக்கு ஆளுநருடன் அவசர சந்திப்பு!

  • June 8, 2026
  • 0 Comments

இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று (08) காலை நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது, சுவிட்சர்லாந்து அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு செயற்றிட்டங்களுக்குக் ஆளுநர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். மத்திய கிழக்குப் போர் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றம் மற்றும் அதனால் வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் தொடர்பில் தூதுவர் இதன்போது […]

ஐரோப்பா

பிரெக்ஸிட் திட்டத்தினால் ஆண்டுக்கு 30 பில்லியன் பவுண்ட்ஸ் இழப்பு!

  • June 8, 2026
  • 0 Comments

பிரெக்ஸிட் திட்டத்தினால் ஆண்டுக்கு 30 பில்லியன் பவுண்ட்ஸ் இழப்பு ஏற்படுவதாக முன்னாள் வெளியுறவுச் செயலாளர் டேவிட் மிலிபான்ட் (David Miliband)  தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதால் ஏற்படும் வருமான இழப்பு, ஐக்கிய இராச்சியம் மீது “தினமும் ஒரு கடுமையான வரியை” விதிப்பதற்குச் சமம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை அவர்  பிரெக்ஸிட் வரி என்று  விவரித்துள்ளார். ‘தி பிரெக்ஸிட் எஃபெக்ட்’ (The Brexit Effect) என்ற புத்தக்கத்தில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் ஏற்படும் பொருளாதார […]

உலகம் செய்தி

தாக்குதலை உடன் நிறுத்தவும்! இஸ்ரேல், ஈரானுக்கு ட்ரம்ப் உத்தரவு!

  • June 8, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் தனது பதிலடித் தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்பே, அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் அமைதி காக்குமாறு ட்ரம்ப் வலியுறுத்தினார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், இந்த அறிவுறுத்தலை பின்பற்றாது ஈரான்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருந்தது. இந்நிலையிலேயே ட்ரம்ப் இவ்வாறானதொரு வலியுறுத்தலை விடுத்துள்ளார்.