ஐரோப்பா

லண்டனை உலுக்கிய கத்திகுத்து தாக்குதல் : புகலிடக் கோரிக்கையாளர் கைது!

லண்டனில் நேற்று இரவு இடம்பெற்ற கத்திகுத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் சூடானை சேர்ந்த 30 வயதுடைய  நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவருக்கு முகம், கழுத்து மற்றும் முதுகில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய காணொளி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் இந்த வன்முறை சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ஸ்டாமர், இதனை வெறுக்கத்தக்க சம்பவம் என கண்டித்ததோடு, பாதிக்கப்பட்ட நபருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

இதேவேளை இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீதான வெறுப்பை அதிகரிக்கும் எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ரீபோர்ம் UK கட்சியின் தலைவர் நைஜல் ஃபாரேஜ்  (Nigel Farage) சந்தேக நபரின் அடையாளம் மற்றும் குடியேற்ற நிலை ஆகியவற்றை உடனடியாக வெளியிட வேண்டும் என்று   கோரிக்கை விடுத்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்