அரசியல் இலங்கை செய்தி

சுரேஷ் சலேவுக்கு சித்திரவதை: அரசு மறுப்பு!

சிஐடி தடுப்பு காவலின்கீழ் சுரேஷ் சலே சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார் என முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் அடியோடு நிராகரித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றார் என முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமைச்சரிடம் கேள்விகள் எழுப்பட்டன.

இவற்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் , அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்தார்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்படும் சந்தேக நபரொருவர், நடத்தப்படவேண்டிய நடைமுறைகளுக்கு அமையவே சுரேஷ் சலே நடத்தப்படுகின்றார்.

விசாரணைகளை திசைதிருப்பும் நோக்கிலேயே சிலர் அரசியல் நாடகங்களை அரங்கேற்றிவருகின்றன. விசாரணை சரியான திசையில் நடைபெறுகின்றது என்பதையே அவர்களின் பதற்றம் வெளிப்படுத்துகின்றது எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை