அமெரிக்காவின் ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் – ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!
ஹோர்முஸ் ஜலசந்தியின் மீது பறந்த அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது.
இதனை தொடர்ந்து இதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று இரவு ஹோர்முஸ் ஜலசந்தியில் ரோந்து சென்ற அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் ஒன்றே இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
இதனை இயக்கிய இரு விமானிகள் ட்ரோன் படகு மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
சுமார் 35 மில்லியன் முதல் 40 மில்லியன் டொலர் வரை மதிப்புள்ள அப்பாச்சி ஹெலிகாப்டர்களை, அமெரிக்க இராணுவம் ஜலசந்திக்கு அருகிலுள்ள ஈரானிய துறைமுகங்களின் முற்றுகையைக் கண்காணிக்க பயன்படுத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.




