இஸ்ரேல் தாக்குதல்களில் லெபனானில் 3 மாதங்களுக்குள் 3.666 பேர் பலி!
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கிடையிலான போரால் லெபனானில் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரையில் 3,666 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் 11,321 பேர் காயமடைந்துள்ளனர் என்று லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு, லெபனானில் இருந்து செயல்பட்டுவருகின்றது.
இந்நிலையில் அவ்வமைப்பின் ராணுவ இலக்குகளை குறிவைத்து கடந்தகாலங்களில் இஸ்ரேல் உக்கிர தாக்குதல்களை நடத்தியது.
லெபனான்மீதான இஸ்ரேலின் தாக்குதலால், இஸ்ரேல்மீது ஈரான் நேற்று தாக்குதல் நடத்தி இருந்தது. பின்னர் இஸ்ரேலும் பதிலடி கொடுத்திருந்தது.
ட்ரம்பின் தலையீட்டையடுத்து இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்தின.





