உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஹமாஸ் ஆயுதக் களைவு: அமெரிக்காவின் திட்டத்திற்கு இஸ்ரேல் நிபந்தனை

காசாவில் அமைதியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு கடந்த வாரம் எட்டப்பட்ட 'அமைதி வாரியத்தின்' (Board of Peace) ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதியுடன் தனக்குக் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

காசாவில் அமைதியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு கடந்த வாரம் எட்டப்பட்ட ‘அமைதி வாரியத்தின்’ (Board of Peace) ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதியுடன் தனக்குக் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

“ஹமாஸ் அமைப்புடன் சமீபத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக ஜனாதிபதியு டிரம்ப்புடன் எனக்குக் கருத்து வேறுபாடுகள் உள்ளன, அதை நான் மறைக்க விரும்பவில்லை” என்று நெதன்யாகு கூறினார்.

மேலும், “மறுசீரமைப்பு கட்டத்திற்குச் செல்வதற்கு முன், ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களைக் களைய வேண்டும் மற்றும் காசா பகுதி முற்றிலும் இராணுவமயமாக்கப்பட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

டிரம்ப்பின் ‘அமைதி வாரியத்தின்’ முதன்மைத் தூதரான நிக்கோலே மலாடேனோவைச் (Nickolay Mladenov) சந்தித்த பின்னரே இஸ்ரேலியத் தலைவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

பாலஸ்தீன அமைப்பான ஹமாஸ் தனது ஆயுதங்களைக் களையும் என்றும், போரினால் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதியிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறும் என்றும் குறிப்பிடும் ‘வரலாற்றுச் சிறப்புமிக்க’ ஒப்பந்தம் ஒன்றை அமைதி வாரியம் எட்டியுள்ளதாகக் கடந்த வாரம் டிரம்ப் தெரிவித்திருந்தார். .

இருப்பினும், இஸ்ரேலின் கடும் எதிர்ப்பை அடுத்து, காசாவிலிருந்து இஸ்ரேல் வெளியேறுவதற்கு முன்பாகவே ஹமாஸ் தனது ஆயுதங்களை முழுமையாகக் களைய வேண்டும் என்று அமைதி வாரியம் தற்போது தெரிவித்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி