பாலஸ்தீன மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடும் இஸ்ரேல்!
காசாவின் மேற்கு கரையில் பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதலில் இஸ்ரேலிய அதிகாரிகள் நேரடியாக ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசாரணை ஒன்றில் தெரியவந்துள்ளது,
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், தினந்தோறும் பாலஸ்தீனியர்களைக் கொன்று, காயப்படுத்தி, இடம்பெயரச் செய்யும் தாக்குதல் சம்பவங்களில் இஸ்ரேலிய அதிகாரிகள் நேரடியாக தொடர்புப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான வன்முறை சம்பவங்கள் 2023 ஆம் ஆண்டில் இருந்து 130 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் குடியேறிகளுடன் சென்று பாலஸ்தீன் மக்கள் மீது தாக்குதல்களை நடத்துகின்றனர். இதற்கு இஸ்ரேலிய அதிகாரிகள் நிதியுதவி உள்ளிட்ட முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இஸ்ரேலிய நீதித்துறை அமைப்புகள் குடியேறிகளுக்குத் தண்டனையிலிருந்து தப்பிக்கும் சூழலை வளர்க்கின்றன என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.





