ஜம்மு-காஷ்மீரில் வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 3 CRPF ஜவான்கள் பலி, 15 பேர் காயம்
மத்திய ரிசர்வ் போலிஸ் படையினர் (CRPF) சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர், மேலும் 12 பேர் காயமுற்றனர்.இவ்விபத்து இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பசந்த்நகர் பகுதியில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) நேர்ந்தது.அந்த வாகனம் சாலையிலிருந்து விலகிச் சென்றோடி, ஆழமான பள்ளத்தில் விழுந்ததாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் இறங்கியதாக உதம்பூர் கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர் சந்தீப் பட் கூறினார். காயமடைந்தவர்களை மீட்டு, உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு […]













