இலங்கையில் தனிமையால் பாதிக்கப்பட்டுள்ள 22.4 வீதமான மாணவர்கள்
இலங்கையில் 22.4 வீதமான மாணவர்கள் தனிமையால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்ததாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட பாடசாலை சுகாதார கணக்கெடுப்பின் படி, இந்த விடயம் தெரியவந்துள்ளது. சமூகத்தில் பல்வேறு காரணங்களால் பாடசாலை மாணவர்கள் தற்போது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் உளநல இயக்குநரக குழாமின் பதில் பணிப்பாளர், விசேட மருத்துவர் லக்மினி மகோதரத்ன தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்ற விசேட மருத்துவர் லக்மினி மகோதரத்ன இதனைத் […]













