கிரிக்கெட் சூதாட்டம்: 11 இந்தியர்கள் அபராதம் விதிக்கப்பட்டு நாடு கடத்தல்
இணையவழி சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அகுரேகொடவில் கைது செய்யப்பட்ட 11 இந்தியர்களை இலங்கையில் இருந்து நாடு கடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று அந்தக் குழுவிற்கு தலா 100,000 ரூபாய் அபராதம் விதித்த பின்னர் நாடு கடத்த உத்தரவிட்டது. பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், தலங்கம பொலிஸார் இந்த வாரம் அக்குரேகொடவில் மேற்கொண்ட சோதனையின் போது மூன்று பெண்கள் உட்பட இந்தியப் பிரஜைகளைக் கைது செய்தனர். சமீபத்திய இந்தியா vs இங்கிலாந்து […]












