பொழுதுபோக்கு

‘கும்கி 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது… ஹீரோ யார் தெரியுமா?

  • October 5, 2025
  • 0 Comments

‘கும்கி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியனா படம் ‘கும்கி’. யானைக்கும் – மனிதனுக்கும் இடையிலான அன்பை பேசிய இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்துக்கு டி.இமான் இசை பெரும் ப்ளஸ்ஸாக அமைந்தது. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியிருக்கிறார் பிரபு சாலமன். இளைஞன் மற்றும் ஓர் […]

பொழுதுபோக்கு

மலையாள சினிமாவில் 300 கோடி ரூபாயை தொடும் ‘லோகா’

  • October 5, 2025
  • 0 Comments

மலையாள படமான ‘லோகா சாப்டர் 1 சந்திரா’ பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. புராண கதை ஒன்றை மையமாக கொண்டு, டொமினிக் அருண் இயக்கிய படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வெளியான முதல் நாளிலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்து, பாக்ஸ் ஆபிஸிலும் முன்னேறியது. இதன் காரணமாக, கடந்த சில வருடங்களில் வெளிவந்த பல படங்களை பின்னுக்குத் தள்ளி, ‘லோகா சாப்டர் 1’ மலையாள சினிமாவில் தனி இடத்தைப் பிடித்தது. இப்போது, ​​‘லோகா’ மலையாள சினிமாவின் […]

இலங்கை

இலங்கை – மஹிந்தவை காண படையெடுக்கும் மக்கள்!

  • October 5, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை காண மக்கள் படையெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மக்களுடன் அவர் பேசி மகிழும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இது குறித்து அவர் இட்டுள்ள முகநூல்  பதிவும் வைரலாகியுள்ளது. அந்தப் பதிவில், நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்ட மக்களின் அன்பு இலாப நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது என்று அவர் கூறியுள்ளார். தனது வாழ்நாளின் பெரும்பகுதியை மக்களிடையே கழித்ததால், மக்களின் அன்பை நன்கு அறிந்திருப்பதாகவும்,  இதன் காரணமாக, அதன் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு […]

பொழுதுபோக்கு

கல்கி 2898 AD 2-ல் தீபிகாவுக்கு பதிலாக இந்த நடிகையா?

  • October 5, 2025
  • 0 Comments

கல்கி 2898 AD படம் கடந்த ஆண்டு வெளியானது முதல் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் மாபெரும் வெற்றி பெற்றது. இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோன் ஆகியோர் நடித்த இந்த சயின்ஸ் ஃபிக்ஷன் படம், இந்து புராணங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்கால உலகத்தை சித்தரித்தது. குறிப்பாக, கல்கியை சுமக்கும் தாய் சுமதி என்ற கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் அசத்தியது. ஆனால் தீபிகா படுகோன் தொடரில் […]

செய்தி

பராகுவேயில் ஒரே நேரத்தில் திருமணம் செய்துக்கொண்ட 600 ஜோடிகள்!

  • October 5, 2025
  • 0 Comments

பராகுவேயில் நேற்று 600 இற்கும் மேற்பட்ட ஜோடிகள் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். “அன்பால் ஒன்றிணைக்கப்பட்டு சட்டத்தால் பாதுகாக்கப்பட்டது” என்று அழைக்கப்படும் பிரச்சாரத்தின் கீழ் இந்த திருமணங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் முதல் திருமண உறவில் இருந்து விடுபட்டு மறு திருமணத்திற்காக காத்திருந்த பலரும் புதிய பந்தத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த திருமண விழாவிற்கு அவர்களுடைய குழந்தைகளும் வந்திருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை இதற்கு முன்னதாக Ciudad del este  என்ற பகுதியில் 120 […]

இலங்கை

4.5 மில்லியன் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற பயணி கட்டுநாயக்காவில் கைது

  • October 5, 2025
  • 0 Comments

வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில், 4.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கடத்த முயன்ற இலங்கை பயணி ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 44 வயதுடைய புத்தளம், கல்பிட்டியைச் சேர்ந்த மீனவர் என இனங்காணப்பட்டுள்ளார். அவர் இன்று அதிகாலை 05.25 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் […]

ஆசியா

நேபாளத்தில் தேசிய விடுமுறை அறிவிப்பு : விமான சேவைகள் இரத்து!

  • October 5, 2025
  • 0 Comments

நேபாளத்தில் இன்று பெய்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலச்சரிவில் வீடொன்று இடிந்து விழுந்ததாகவும், அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 06 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் மேலும் 05 பேர் தனித்தனியாக இடம்பெற்ற நிலச்சரிவு சம்பவங்களில் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதுடன், மீட்புப்  பணியாளர்கள் களத்தில் பணியாற்றி வருவதாக அந்நாட்டின் […]

இலங்கை

இலங்கை – வாடகை வீட்டிற்கு குடிபெயரும் சந்திரிகா!

  • October 5, 2025
  • 0 Comments

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கொழும்பில் உள்ள தனது அதிகாரப்பூர்வ அரசாங்க இல்லத்தில் இருந்து அடுத்த இரண்டு அல்லது மூன்று  வாரங்களுக்குள் வெளியேறி வாடகை வீட்டிற்கு குடிபெயர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் ஒருவர் வெளியிட்ட தகவலின்படி, அவரது உடல்நலக்குறைவு காரணமாக இந்த நடவடிக்கை தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலை காரணமாக, அவர் அரசாங்கத்திடம் 34 மாத கால நீட்டிப்பு கோரியுள்ளதாகவும்  கூறப்படுகிறது. இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போது வசித்து […]

ஆசியா

இந்தோனேசிய உறைவிடப் பாடசாலை விபத்து; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்வு

  • October 5, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவில் உறைவிடப் பாடசாலைக் கட்டிட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஜாவா மாகாணத்தில் மாணவர்கள் மதிய தொழுகைக்காக ஒன்றுகூடியபோது பாடசாலைக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளதாக பிராந்திய மீட்பு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை(05) தெரிவித்தனர். கிழக்கு ஜாவா தேடல் மற்றும் மீட்பு அலுவலகத்தின் தலைவர் நானாங் சிகிட், இடிபாடுகளுக்குள் பாதிக்கப்பட்டவர்கள் புதைந்துள்ளதால், மீட்புப் பணிகள் சவாலானதாகக் காணப்படுவதாகத் தெரிவித்தார். மேலும் சுமார் 25 பேர் காணாமல் போயுள்ளனர், மற்றும் […]

ஐரோப்பா

ரஷ்யாவில் உள்ள வில்யுச்சின்ஸ்கி எரிமலையிலிருந்து விழுந்து இரு சுற்றுலாப் பயணிகள் பலி

  • October 5, 2025
  • 0 Comments

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள வில்யுச்சின்ஸ்கி எரிமலையில் மலை ஏறும் போது தவறிவிழுந்து இரு சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததாக பிராந்திய அதிகாரிகள் சனிக்கிழமை(04/10) தெரிவித்தனர். யெலிசோவோ நகருக்கு அருகில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.அவர்களை மீட்கும் பணியில் மருத்துவர்கள், மலை நிபுணர்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் ஆகிய 45 பேர் கொண்ட குழு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களில் 23 பேர் கொண்ட தரைப்படைக் குழு தரையிலிருந்து சுமார் 1,500 மீட்டர் (4,920 அடி) உயரத்தில் மலை ஏறுபவர்களைக் கண்டுபிடித்தனர். […]