உலகம் செய்தி

இம்ரான் கானை சிறைச்சாலையிலிருந்து வைத்தியசாலைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (PTI) கட்சியின் தலைவருமான இம்ரான் கானின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு, அவரை உடனடியாகச் சிறையிலிருந்து மருத்துவமனைக்குத் மாற்றுமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (PTI) கட்சியின் தலைவருமான இம்ரான் கானின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு, அவரை உடனடியாகச் சிறையிலிருந்து மருத்துவமனைக்குத் மாற்றுமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

73 வயதான இம்ரான் கான், 2022 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, தன் மீது சுமத்தப்பட்ட பல்வேறு வழக்குகள் காரணமாக 2023 ஆகஸ்ட் மாதம் முதல் ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் உள்ள அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், குறிப்பாக அவரது வலது கண்ணின் பார்வைத்திறன் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது குடும்பத்தினரும் வழக்கறிஞர்களும் கவலை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே, அவரது உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இம்ரான் கானை 48 மணி நேரத்திற்குள் இஸ்லாமாபாத்திலுள்ள ‘ஷிபா சர்வதேச மருத்துவமனைக்கு’ (Shifa International Hospital) மாற்றுமாறும், செப்டம்பர் 16 ஆம் திகதி வரை அங்கேயே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இதயநோய் நிபுணர், பொது மருத்துவ நிபுணர், கண் மருத்துவ நிபுணர் மற்றும் இம்ரான் கானின் தனிப்பட்ட மருத்துவர் அடங்கிய மருத்துவக் குழுவொன்றை அமைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை வரவேற்றுள்ள பி.டி.ஐ (PTI) கட்சி, இதனைத் தாமதமின்றி உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

அதேவேளை, மருத்துவமனைக்கு வெளியே ஆதரவாளர்கள் எவரும் கூடி கூட்ட நெரிசலை ஏற்படுத்த வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி