ஆசியா

நேபாளத்தில் தேசிய விடுமுறை அறிவிப்பு : விமான சேவைகள் இரத்து!

நேபாளத்தில் இன்று பெய்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நிலச்சரிவில் வீடொன்று இடிந்து விழுந்ததாகவும், அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 06 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் மேலும் 05 பேர் தனித்தனியாக இடம்பெற்ற நிலச்சரிவு சம்பவங்களில் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதுடன், மீட்புப்  பணியாளர்கள் களத்தில் பணியாற்றி வருவதாக அந்நாட்டின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நேபாளத்தின் வானிலை அவதானிப்பு நிலையம் சனிக்கிழமை முதல், வரும் திங்கட்கிழமை வரை கடுமையான மழை பொழியும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், விமானப்  போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்