உலகம் செய்தி

05 வருடங்களுக்கு பிறகு மீளவும் சீனாவிற்கான விமானசேவைகளை ஆரம்பித்த இந்தியா!

இந்தியாவும், சீனாவும் இன்று முதல் நேரடி விமான சேவைகளை மீளவும் ஆரம்பித்துள்ளன.

கடந்த 2020 ஆம் ஆண்டு இமாலயா பகுதியில் இடம்பெற்ற இராணுவ மோதல்களை தொடர்ந்து ஐந்து வருட காலமாக விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் தற்போது விமான சேவைகளை ஆரம்பிக்க இணங்கியுள்ளன. விமானங்களை மீண்டும் தொடங்குவது “மக்களுக்கு இடையேயான தொடர்பை” அதிகரிக்கும் மற்றும் “இருதரப்பு பரிமாற்றங்களை படிப்படியாக இயல்பாக்குவதற்கு” உதவும் என்று இந்திய அரசாங்கம் கூறியது.

இந்தியாவின் மிகப்பெரிய வணிக விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo) , தினசரி விமானத்தை இயக்கவுள்ளது.

இந்த விமானமானது இன்று இரவு 10 மணிக்கு கொல்கத்தாவிலிருந்து (Kolkata)  குவாங்சோவுக்கு (Guangzhou) புறப்படுகிறது.  கூடுதல் விமான சேவைகள் அடுத்த மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி