அமெரிக்காவை தாக்கவுள்ள வெப்பக் குவிமாடம் – 25 கோடி பேர் பாதிக்கப்பட வாய்ப்பு
வரும் ஜுலை 04 ஆம் திகதி அமெரிக்காவின் பெரும்பாலான பகதிகளை வெப்ப குவிமாடம் பாதிக்கும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இது 100 டிகிரி ஃபாரன்ஹீட்டிற்கும் அதிகமான வெப்பநிலையையும், கடுமையான ஈரப்பதத்தையும் ஏற்படுத்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது,
வெப்பக் குவிமாடங்கள் என்பவை ஒரு வாரம் அல்லது அதற்கும் மேலாக வெப்பத்தைத் தக்கவைத்து, மேகங்கள் உருவாவதைத் தடுத்து, சாதனை அளவிலான வெப்பநிலைக்கு வழிவகுக்கும் நீடித்த உயர் அழுத்த அமைப்புகளாகும்.
மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றம், வெப்பக் குவிமாடங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை 150 மடங்கு அதிகரித்துள்ளது.
மேலும், உருவாகி வரும் “காட்ஸிலா” எல் நினோ அமைப்பு உலகளவில் அபாயகரமான வெப்பத்தை மேலும் தீவிரப்படுத்துகிறது.
இந்த வெப்ப அலை காரணமாக அமெரிக்காவின் 25 கோடிமக்கள் பாதிக்கப்படுவார்கள் கணிக்கப்பட்டுள்ளது.




