உலகம்

ஆஸ்திரேலியாவை உலுக்கும் வெப்ப அலை – மில்லியன் கணக்கான மக்களுக்கு எச்சரிக்கை!

ஆஸ்திரேலியாவில் இன்று தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் இம்முறை சில பகுதிகளில் இந்த தினத்தை ஒட்டி நடத்தப்படும் கொண்டாட்டங்கள்  இரத்து செய்யப்பட்டுள்ளன.

அடிலெய்டில், கடுமையான வெப்ப முன்னறிவிப்பு காரணமாக ஆஸ்திரேலிய தின அணிவகுப்பு மற்றும் ஒளி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மில்லியன் கணக்கான மக்களுக்கு வெப்பநிலை குறித்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளைய தினம் வெப்பநிலை உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தெற்கு மாநிலங்களான விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக 40 பாகை செல்சியஸை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் தீ விபத்து குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தெற்கு ஆஸ்திரேலியாவில் நேற்றைய தினம்  48.5C வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்