அமெரிக்காவில் வெப்பக் குவிமாடம் – இயல்பை விட அதிகரிக்கும் வெப்பநிலை
அமெரிக்காவில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து வெப்பநிலை இயல்பை விட 15 முதல் 25 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் வடக்கு சமவெளிகளில் நிலைபெறும் இந்த உயர் அழுத்த அமைப்பு, வெப்பக் காற்றை உள்ளே தக்கவைத்து, குளிர்விக்கும் காற்றைத் தடுக்கும்.
இதன் விளைவாக, நெவாடா, உட்டா மற்றும் மொன்டானா போன்ற மாநிலங்களில் சாதனை அளவிலான மூன்று இலக்க உச்ச வெப்பநிலை பதிவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெப்பநிலை குறிப்பிட்ட சுகாதார அபாயத்தை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படும் மனிதனால் உண்டாகும் காலநிலை மாற்றமே, இந்த காலநிலை மாற்றத்திற்கு காரணம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.




