ஐரோப்பா

பிரித்தானியாவில் தஞ்சம் கோருவதற்கான உரிமை : லண்டன் உயர்  நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பிரித்தானிய  உள்துறை அமைச்சகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்குபவர்கள்  தஞ்சம் கோருவதற்கான உரிமையை இரத்து செய்தது.

பிரான்ஸுடன் மேற்கொள்ளப்பட்ட One in – One out ஒப்பந்தம் தோல்வியடைந்ததை தொடர்ந்து இந்த புதிய திட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் அரசாங்கத்தின் இந்த செயற்பாடு சட்டவிரோதமானது என  லண்டன் உயர்  நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

நீதிபதி கிளைவ் ஷெல்டன், 2025-ஆம் ஆண்டில், ஆரம்பத்தில் ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல என்று கருதப்பட்டவர்களில் 79 சதவீதமானோர் மறுபரிசீலனையில் சாதகமான முடிவைப் பெற்றுள்ளனர் என சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு எதிராக மேன் முறையீடு செய்யவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துவதைத் தடுக்க, கடைசி நேர நவீன அடிமைத்தனக் கோரிக்கைகள் பயன்படுத்தப்படக்கூடாது” என்று கூறினார்.

இந்த சவாலைக் கொண்டுவந்த சில புகலிடக் கோரிக்கையாளர்களின் வழக்கறிஞர்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்