பொழுதுபோக்கு

பிக்பாஸ் பிரியர்களுக்கு கடைத்தது மகிழ்ச்சியான செய்தி

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் ப்ரோமோ எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 6 சீசங்களாக உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில், 7வது சீசனையும் அவரே தொகுத்து வழங்க உள்ளார்.

100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் எந்தவித வெளியுலகத் தொடர்பும் இல்லாமல், மக்களின் ஆதரவோடு பிரபலங்கள் தங்களுடைய முன் பின் தெரியாத பிரபலங்களுடன் இந்த வீட்டில் எந்த விதமான சூழ்நிலையிலும் தாக்குப் பிடித்து தங்க வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய டாஸ்க்.

கடந்த ஒரு மாதமாகவே பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. மேலும் சில வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பிக்பாஸ் சீசன் 7 போட்டிக்கான ஆடிஷனில் கலந்து கொண்டதாகவும் அவர்களுடைய பெயர் பட்டியலும் வெளியானது.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கோவை பெண் டிரைவரான ஷர்மிளா, ரேகா நாயர், குக் வித் கோமாளி சரண், நடிகர் பப்லு பிருதிவிராஜ், நடன இயக்குனர் ஸ்ரீதர், ஆகியோர் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க, இந்த மாதம் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஒரு சில காரணங்களால் அடுத்த மாதம் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஷூட் ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில், இதனை இந்த மாத இறுதியில் வெளியிட முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. மேலும் பிக்பாஸ் ரசிகர்களும் சீசன் 7 நிகழ்ச்சியை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 5 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content