பொழுதுபோக்கு

மீண்டும் விஜய் -திரிஷா காம்பினேஷன்… கோட் பட 3வது சிங்கிள் அப்டேட் இதோ

நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் வில்லனாக நடிகர் மோகன் நடித்துள்ளார்.

விஜய்க்கு வில்லனாக மோகன் இந்த காம்பினேஷன் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் குடும்ப செண்டிமெண்டையும் இணைத்து கோட் படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள சூழலில் அடுத்ததாக வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதே போல படத்தின் இசை வெளியிடும் ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் நடக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக மெலடியாக வெளியான 2வது பாடலில் மறைந்த பாடகி பவதாரணி வாய்சுடன் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடிகர் விஜய் இணைந்து பாடியுள்ளார். இந்நிலையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்த படத்தின் 3வது பாடல் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

படத்தில் நடிகை திரிஷா, விஜய்யுடன் இணைந்து பாடல் ஒன்றுக்கு ஆட்டம் போட்டுள்ள நிலையில் இந்தப் பாடல் தான் அடுத்ததாக லிரிக் வீடியோவாக வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. லியோ படத்துக்கு பிறகு இந்த பாடலில் விஜய் மற்றும் திரிஷாவின் கெமிஸ்ட்ரி மீண்டும் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த படத்தின் இசை வெளியீடும் ஆகஸ்ட் மாதம் 3வது வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் அடுத்தடுத்த அப்டேட்களுடன் படக்குழுவினர் ரசிகர்களை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்