பொழுதுபோக்கு

விஜய் குறித்து சமந்தா கூறிய சூப்பர் தகவல்… தீயாய் பரவும் செய்தி

ஹைதராபாத்தில் நடைபெற்ற மார்வெல் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா கலந்து கொண்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் மும்பையில் தென்பட்ட சமந்தா தற்போது ஹைதராபாத்தில் மார்வெல் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நிலையில், தீபாவளிக்கு செம ட்ரீட் காத்திருக்கு என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி உள்ளனர்.

மேலும், நடிகர் விஜய் குறித்தும் சமந்தா அந்த நிகழ்ச்சியில் பேசியது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

கேப்டன் மார்வெல் உள்ளிட்ட மார்வெல் கதாபாத்திரங்கள் நடிப்பில் உருவாகி உள்ள பெண்களை மையப்படுத்திய சூப்பர் ஹீரோ படம் வரும் நவம்பர் 10ம் தேதி தீபாவளி ரிலீஸாக வெளியாகிறது. இந்நிலையில், அதுதொடர்பான புரமோஷனை தற்போது இந்தியாவில் மார்வெல் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

மார்வெலின் தீவிர ரசிகையான நடிகை சமந்தா சிட்டாடல் வெப்சீரிஸில் நடித்து வரும் நிகழ்ச்சியில் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற மார்வெல் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்து கொண்டு செம ஸ்வாகாக கலந்து கொண்டு கலக்கினார். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் டிரெண்டாகி வருகின்றன.

கேப்டன் மார்வெல் லீடு ரோலுக்கு நடிகை சமந்தா டப்பிங் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

இந்திய நடிகர்கள் மார்வெல் படத்தில் இணைந்து நடித்தால் யாரெல்லாம் தகுதியானவர்கள் என நினைக்கிறீங்க என்கிற கேள்விக்கு நடிகை சமந்தா சட்டென அல்லு அர்ஜுன், விஜய், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் கச்சிதமாக இருப்பார்கள் எனக் கூறியுள்ளார். நடிகர் விஜய் பற்றி சமந்தா சொல்லி உள்ள நிலையில், அந்த வீடியோ க்ளிப்பை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்