இலங்கை

மோசமான வானிலை -13 பாடசாலைகள் மூடல்

நிலவும் மோசமான வானிலை காரணமாக, நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட 13 பாடசாலைகள் இன்றைய தினம் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா கல்வி வலயத்திலுள்ள 156 பாடசாலைகளில் நான்கும், ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள 150 பாடசாலைகளில் ஒன்பதும் மூடப்பட்டுள்ளதாக வளையக் கல்வி பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நிலவும் மோசமான வானிலைச் சூழலில், பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்பது குறித்த முடிவை எடுக்கும் அதிகாரம், வலயக் கல்விப் பணிப்பாளர்களால் அந்தந்தப் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

அதற்கிணங்க, குறித்த 13 பாடசாலைகளையும் மூடுவதற்கான முடிவு அதிபர்களால் எடுக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்