ரஷ்யாவின் நிழல் கப்பலை கைப்பற்றிய பிரான்ஸ்
ரஷ்யாவின் “நிழல் கப்பற்படைக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் கப்பல் ஒன்றை பிரான்ஸ் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த கப்பலை அந்நாட்டின் இராணுவம் இன்று ரீயூனியன் தீவுக்கு கொண்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
உக்ரைன் மீது படையெடுத்ததற்காகவும், அதன் எண்ணெய் வருவாயைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டும் ரஷ்யா மீது மேற்கத்தேய நாடுகள் தடைகளை விதித்துள்ளன.
இந்நிலையில் குறித்த தடைகளில் இருந்து தப்பித்து எண்ணெய் ஏற்றுமதியை தொடர ரஷ்யா இவ்வாறான நிழல் கப்பல்படையை பயன்படுத்தி வருகிறது.
முன்னர் கலினின்கிராட் என்று பெயரிடப்பட்டு, பெனின் கொடியை ஏற்றியிருந்த டி.எஃப். பீக் (DF Peak) என்ற இந்தக் கப்பல், 2024-ஆம் ஆண்டிலிருந்து பிரான்சால் கைப்பற்றப்பட்ட, குறைந்தது ஐந்தாவது எண்ணெய்க் கப்பலாகும்.





