ஐரோப்பா

மலட்டு தன்மையுடன் ஆண் நுளம்புகளை உருவாக்கும் பிரான்ஸ்

ஐரோப்பிய நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்து வரும் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசாங்கம் புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.

அதாவது மில்லியன் கணக்கான டெங்கு நுளம்புகளை இனப்பெருக்கம் செய்து, அவற்றை விடுவிக்க திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு உருவாக்கப்படும் அனைத்து நுளம்புகளும் மலட்டு தன்மையான ஆண் நுளம்புகளாகும்.

மான்ட்பெல்லியரில் (Montpellier)  உள்ள ஆலையில் ஒவ்வொரு வாரமும் சுமார் 1.5 மில்லியன் மலட்டு தன்மை உள்ள ஆண் நுளம்புகள் உருவாக்கப்படுகின்றன.

டெங்கு, ஜிகா மற்றும் சிக்கன்குனியா போன்ற நோய்களைப் பரப்பக்கூடிய நுளம்புகள் அதிகமாக காணப்படும் இடங்களில் இந்த நுளம்புகள் விடுவிக்கப்படுகின்றன.

இந்த செயல்முறையை விஞ்ஞானிகள் “மலட்டுப் பூச்சி நுட்பம்” என்று அழைக்கிறார்கள். இவ்வாறு விடுவிக்கப்படும் ஆண் நுளம்புகளுடன் பெண் நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும்போது அதன் வாரிசுகள், அல்லது சந்ததிகள் உருவாகாது.

இது நுளம்புகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைக்க உதவுகிறது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்