மக்களுக்கு சிறந்த சேவையை தாமதமின்றி செய்ய வேண்டும் – சரவணபவன் தெரிப்பு
பணிப்பாளராக இருந்தாலும் குழுத் தலைவராக செயற்படுவதையே நான் விரும்புகின்றேன் என மாகாண பணிப்பாளர் என்.சரவணபவன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணியகத்தில் (17) கடமையை பொறுப்பேற்ற பின்னர் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.
மக்களின் பிரச்சினைகளையும் ஊழியர்களின் பிரச்சினைகளையும் நான் நன்கு அறிந்தவன்.
திருகோணமலை மாவட்டத்தை மட்டுமல்லாமல் கிழக்கு மாகாண பிரச்சனைகளையும் அறிந்தவன் என்ற அடிப்படையில் மக்களுக்கும் ஊழியர்களுக்கும் சிறந்த சேவையை தாமதம் இன்றி வழங்க வேண்டும் எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் புவனேந்திரநாதன், திட்டமிடல் வைத்திய அதிகாரி எம்.எம்.எம்.முனாஸ் டொக்டர் லதாவின் மற்றும் டொக்டர் ஜயந்தன் உட்பட திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






