மலட்டு தன்மையுடன் ஆண் நுளம்புகளை உருவாக்கும் பிரான்ஸ்
ஐரோப்பிய நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்து வரும் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசாங்கம் புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது. அதாவது மில்லியன் கணக்கான டெங்கு நுளம்புகளை இனப்பெருக்கம் செய்து, அவற்றை விடுவிக்க திட்டமிட்டுள்ளது. இவ்வாறு உருவாக்கப்படும் அனைத்து நுளம்புகளும் மலட்டு தன்மையான ஆண் நுளம்புகளாகும். மான்ட்பெல்லியரில் (Montpellier) உள்ள ஆலையில் ஒவ்வொரு வாரமும் சுமார் 1.5 மில்லியன் மலட்டு தன்மை உள்ள ஆண் நுளம்புகள் உருவாக்கப்படுகின்றன. டெங்கு, ஜிகா மற்றும் சிக்கன்குனியா போன்ற நோய்களைப் பரப்பக்கூடிய […]




