இந்தியா செய்தி தமிழ்நாடு

கைதிகள் தப்பியோட்டம்: தலைமை சிறை அதிகாரி இடமாற்றம்

தமிழகத்தில் 17 விசாரணைக் கைதிகள் சிறையிலிருந்து தப்பிய சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைத்துறை தலைமைப் பொலிஸ் அதிகாரி சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 17 விசாரணைக் கைதிகள் சிறையிலிருந்து தப்பிய சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைத்துறை தலைமைப் பொலிஸ் அதிகாரி சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் தேனி மாவட்டத்திலுள்ள தேக்கம்பட்டி கிளைச் சிறையிலிருந்து கடந்த திங்கட்கிழமை இரவு 17 விசாரணைக் கைதிகள் தப்பிச் சென்றனர்.

போலியான மருத்துவ அவசரநிலையை ஏற்படுத்தி, சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு அவர்கள் தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு, தப்பியோடிய 17 பேரையும் 43 மணிநேரத்திற்குள் மீண்டும் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய சந்தீப் ராய் ரத்தோர், சென்னையிலுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) தலைமை கண்காணிப்பு அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக, சென்னையில் அமலாக்கப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையின் (Enforcement Bureau CID) கூடுதல் பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய கே. சங்கர், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறை பாதுகாப்பில் ஏற்பட்ட இந்தப் பெரும் குறைபாட்டைத் தொடர்ந்து, கைதிகள் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காகத் தேவையேற்பட்டால் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதற்கும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் கைது செய்யப்பட்ட கைதிகளைத் தமிழகத்தின் உயர் பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட சிறைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சட்ட நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர், அவர்கள் சேலம், வேலூர், கடலூர் மற்றும் புழல் மத்திய சிறைகளுக்கு மாற்றப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி