இந்தியா செய்தி

மணிப்பூரில் நிதி நெருக்கடி: மத்திய அரசிடம் கையேந்தினார் முதல்வர்

மணிப்பூர் மாநிலத்தின் நிதி நிலைமை தொடர்பில், மாநில முதலமைச்சர் யும்னம் கெம்சந்த் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தின் நிதி நிலைமை தொடர்பில், மாநில முதலமைச்சர் யும்னம் கெம்சந்த் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

புதுடில்லியில் உள்ள கர்த்தவ்ய பவனில் (29) நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, கடந்த மூன்று ஆண்டுகளாக மாநிலம் எதிர்கொண்டுள்ள வருவாய் இழப்புகள் குறித்து முதலமைச்சர் எடுத்துரைத்துள்ளார்.

மாநிலத்தின் நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காக மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதியுதவியை வழங்குமாறும், மாநிலங்களின் மூலதன முதலீட்டுக்கான சிறப்பு உதவித் திட்டத்தின் (SASCI) கீழ் மேலதிக நிதி ஒதுக்கீட்டை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், மாநிலத்தின் நிதி ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் நிதி முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் மத்திய நிதியமைச்சருக்கு விளக்கமளித்துள்ளார்.

அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான கொடுப்பனவுகளை ஒவ்வொரு மாதமும் முதல் வேலை நாளில் உரிய நேரத்தில் வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெளிநாட்டு உதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றம், மத்திய அரசின் அனுசரணையுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் ஏனைய அபிவிருத்திப் பணிகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தின் நிதிநிலையை மேம்படுத்துவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளதாக அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி