ஜேர்மனியல் ஓநாய் தாக்குதலுக்கு இலக்கான 08 வயது சிறுமி
ஜெர்மனியில் உள்ள வனவிலங்கு பூங்காவில் 08 வயது சிறுமி ஒருவர் ஓநாய் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று பெர்லினுக்கு அருகே பிராண்டன்பர்க்கில் உள்ள ஜோஹானிஸ்முலே Johannismühle வனவிலங்குப் பூங்காவில் இடம்பெற்றுள்ளது.
இதில் படுகாயம் அடைந்த சிறுமி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வனவிலங்கு காப்பகம் திறக்கப்படுவதற்கு முன்பே இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
ஜோஹானிஸ்முலே சிறிய குழு சுற்றுப்பயணங்களையும் “பிரத்தியேக” வருகைகளையும் வழங்குகிறது.
மேலும் “ஓநாய்களுக்கு உணவளிக்கும்” வாய்ப்பும் அங்கு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பூங்காவில் சாம்பல் நிற மற்றும் ஆர்க்டிக் ஓநாய்களுடன், பழுப்பு கரடி மற்றும் லிங்க்ஸ் உள்ளிட்ட பிற விலங்குகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.





