ஐரோப்பா

லண்டனில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் தீவிபத்து – 07 பேர் வைத்தியசாலையில்!

லண்டனில் A5 சாலைக்கு அருகில் அமைந்துள்ள ஃபால்கிர்க் ஹவுஸில் (Falkirk House) தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அக்கட்டிடத்தில் இருந்து குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த தீவிபத்து சம்பவம்  இன்று காலை இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் கட்டிடத்தின் 05 ஆவது மாடியில் தீவிபத்து கண்டறியப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பில் உடனடியாக தீயணைப்பு துறைக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த தீயணைப்பு படையினர்   விபத்தால் காயமடைந்த 07 பேரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.  அதேநேரம்  மேலும் 15 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக லண்டன் தீயணைப்புத் துறை (LFB) தெரிவித்துள்ளது.

மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்