ஐரோப்பா

ஜெர்மனியில் F-16 ரக போர் விமானம் விபத்து

  • September 22, 2026
  • 0 Comments

ஜெர்மனியில் உள்ள ஸ்பாங்டால்ம் (Spangdahlem) விமானப்படை தளத்திற்கு அருகே, அமெரிக்க விமானப்படையின் F-16 போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. பின்ஸ்பெல்ட் (Binsfeld) கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு கோல்ஃப் மைதானத்தில் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளாவதற்குச் சற்று முன்பு விமானி அதிலிருந்து வெளியேறியுள்ளார். அவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.