இலங்கை: அறுகம்பை தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு நிலைமைகள் குறித்து விசேட கவனம்
பாதுகாப்பு செயலாளர் இன்று (நவம்பர் 10)கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து, அறுகம் குடா பகுதியில் உள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, பிரதேசத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், உள்ளூர் சிரேஷ்ட இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் தற்போதைய திட்டம் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
அதற்கமைவாக, பிரதேசத்தின் பாதுகாப்பைப் பேணுவதற்கும், தீவின் ஏனைய பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, பாதுகாப்புச் செயலாளர் உரிய அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.
சுற்றுலாப் பயணிகளின் சுதந்திரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையிலும், இலங்கையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் பாதுகாப்பு செயலாளருடன் இணைந்து கொண்டனர்.