உலகம்

அமெரிக்காவின் FBI மற்றும் வேளாண்மைத் துறையில் ஹேக்கர்கள் கைவரிசை

அமெரிக்க வேளாண்மைத் துறை மற்றும் ஃபெடரல் புலனாய்வுப் பணியகத்தின் (FBI) தரவுத்தளங்களை ஹேக்கர்கள் ஊடுருவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபகாலமாகவே அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பங்களில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

ஹேக்கர்கள், மிகவும் முக்கியமான தகவல்களை அணுகுவதற்கு, பணம் செலுத்தும் முறையை ஒரு மறைமுக வழியாகப் பயன்படுத்தக்கூடும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதேநேரம் அமெரிக்க வேளாண்மைத் துறை “பல அச்சமூட்டும் உயிரியல் சிக்கல்களைக்” கையாள்வதாகவும், “ஒரு எதிரி அல்லது போட்டியாளருக்கு அதே தகவல்கள் கிடைத்தால், அவர்கள் நமது சொந்த ஆராய்ச்சியை நமக்கே எதிராகப் பயன்படுத்தக்கூடும்” என்றும் ஒரு முன்னாள் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக NBC செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை சமீபத்திய வாரங்களில் ஏற்பட்ட பெரிய செயலிழப்புகள், அமெரிக்கா முழுவதும் எண்ணற்ற பயனர்களின் பயணம், தகவல் தொடர்பு மற்றும் மின்னணு வர்த்தகத்தை சீர்குலைத்துள்ளதுடன், தேசிய பாதுகாப்பு முகமையின் ஒரு அதிரகசிய வலையமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப்,  மக்களை “ஆசுவாசப்படுத்திக் கொள்ளுமாறு” கேட்டுக்கொண்டுள்ளார்.

அதே நேரத்தில் இந்த செயலிழப்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது அல்ல எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்