கச்சா எண்ணெயின் விலை 06 சதவீதத்தால் உயர்வு!
கடந்த 24 மணிநேரத்தில் மத்தியக் கிழக்கில் நடத்தப்பட்ட உச்சக்கட்ட தாக்குகுதல்கள் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 6 சதவீதத்தால் உயர்ந்துள்ளது.
இதன்படி பிரண்ட் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு $6.79 அல்லது 6.3 சதவீதம் உயர்ந்து $114.96 ஆக பதிவாகியுள்ளது.
அதேபோல் அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் விலை $4.23 அல்லது 4.2 சதவீதம் உயர்ந்து $106.17 ஆக பதிவாகியுள்ளது.





