இலங்கை செய்தி

கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் (A009) மஹையாவ சுரங்கப்பாதை நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

கண்டி நகரத்திற்கு பிரவேசிக்கும் பிரதான வீதிகளில் ஒன்றான கண்டி-யாழ்ப்பாணம் வீதியில் (A009) மஹையாவ சுரங்கப்பாதையின் நிர்மாணப் பணிகள் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் 699.6 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் இந்த சுரங்கப்பாதையின் நிர்மாணப் பணிகள், இன்றிலிருந்து 273 நாட்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சுரங்கப்பாதைத் திட்டத்தைப் பார்வையிட்ட ஜனாதிபதி, அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன் அங்கு கூடியிருந்த மக்களுடனும் சுமூகமாக உரையாடினார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், கண்டி மாவட்ட மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை