முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ்: திமுக சீற்றம்!
தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவளிப்பது என்ற காங்கிரஸின் முடிவு திமுகவின் முதுகில் குத்தும் செயல் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை விமர்சித்துள்ளார்.
‘தவெகவுக்கு ஆதரவு அளிப்பது என்ற முடிவை காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் இந்த நிலைப்பாடு மிகவும் குறுகிய பார்வை கொண்டது. தொலைநோக்குப் பார்வை அற்றது. இப்படி ஒரு முடிவை எடுப்பதற்காக அவர்கள் வருந்த நேரிடும்.’ எனவும் அண்ணாதுரை சுட்டிக்காட்டியுள்ளார்.
காங்கிரஸின் இந்த முடிவால் தேசிய மட்டத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.




