இலங்கை செய்தி

பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து இலங்கை, பாகிஸ்தான் அவதானம்!

இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய தூதுவர் மேஜர் ஜெனரல் நய்யார் நஸீர் (Nayyar Naseer), இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற மேற்படி சந்திப்பின்போது, இலங்கையில் அவரது தூதரகப் பதவிக்காலத்தை ஆரம்பிப்பது தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை, குறிப்பாகப் பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயிற்சி மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் மேலும் வலுப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தபட்டது.

இரு தரப்பினரும் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்துக் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.

இச்சந்திப்பில் இலங்கைக்கான பாகிஸ்தான் துணை உயர் ஸ்தானிகர் Ms. Zunairq Latif மற்றும் இலங்கைக்கான பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் (Defence Attaché) ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!