அணுவாயுதங்கள் இல்லாத உலகை கட்டியெழுப்ப சீன ஜனாதிபதி அழைப்பு
“உலகை அணு ஆயுதங்கள் இல்லாததாக மாற்றுவதற்காக, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.
சீனாவின் ஷென்சென் நகரில் இன்று நடைபெற்ற ஏபெக் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக சீனா, ரஷ்யா மற்றம் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு இடையே முத்தரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போதே சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர், உலகை அணு ஆயுதங்கள் இல்லாததாக மாற்றுவதற்காக, காலப்போக்கில் அணு ஆயுதங்கள் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டு முழுமையாக அழிக்கப்பட வேண்டும்.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தைக் கடைப்பிடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் ஒருவருக்கொருவர் வகுத்துள்ள சிவப்பு கோடுகளை மதிக்கவும் ஷி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன் தொழில்துறை விநியோகச் சங்கிலிகளைப் பிரிப்பதையும் சீர்குலைப்பதையும்” தொடர்வதற்குப் பதிலாக, மூன்று நாடுகளும் “ஒத்துழைப்பின் பங்கை விரிவுபடுத்தி, இரு தரப்புக்கும் வெற்றி மற்றும் அனைவருக்கும் வெற்றி தரும் விளைவுகளை அடைய வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.




