புதிய புகலிட சீர்த்திருத்தங்களுக்கு பிரித்தானியாவின் காமன்ஸ் அவை ஒப்புதல்
குடிவரவு மற்றும் புகலிட அமைப்பில் உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் கொண்டுவந்த சீர்திருத்தங்கள் நாடாளுமன்றத்தின் காமன்ஸ் அவையில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதன்படி 290 பேர் கொண்ட காமன்ஸ் அவையில் 160 பெரும்பான்மை வாக்குகளால் மஹ்மூத்தின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 94 பேர் இந்த திட்டங்களுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த சட்டமூலம் பிரபுக்கள் அவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும்.
அரசாங்கத்தின் புகலிடம் மற்றும் திருப்பி அனுப்பும் கொள்கை குறித்த புதிய சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு ஓராண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்த வாக்கெடுப்பு நடந்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சபானா மஹ்மூத், இந்த சீர்திருத்தத் தொகுப்பு, அனைவருக்கும் நியாயமான ஒரு குடிவரவு அமைப்பை உருவாக்கும்.
உண்மையாகப் பாதுகாப்பு தேவைப்படுபவர்களுக்குப் பாதுகாப்பை வழங்கும் அதே வேளையில், நமது பெருந்தன்மையைச் சுரண்ட நினைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த சட்டத்திருத்தத்திற்கு அமைய,
01. புலம்பெயர்ந்தவர் நாட்டில் வாழ வேண்டிய அடிப்படைக் காலம் ஐந்து ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்படும்.
02. அதிக ஊதியம் பெறுபவர்களுக்கு இந்தக் காலக்கெடு குறைக்கப்படும் அதேவேளை சட்டவிரோத குடியேறிகள் மற்றும் அகதிகளுக்கு நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஷபான மஹ்மூத் முன்மொழிந்துள்ள திட்டங்களிலும் சில சீர்த்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அதற்கமைய புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அவரை உடனடியாக நாடு கடத்த புதிய திட்டத்தில் வழியமைக்கப்பட்டுள்ளது.
அதாவது தங்கள் புகலிடம் அல்லது குடிவரவுக் கோரிக்கையை புதிய சுதந்திரமான குடிவரவு மேல்முறையீட்டு ஆணையத்திடம் மேல்முறையீடு செய்து தோல்வியடைந்த புலம்பெயர்ந்தோரை, கூடுதல் அறிவிப்புக் காலம் இன்றி வெளியேற்ற குடிவரவு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.




