இந்தியா செய்தி

விஸ்கி வரி விவகாரம்: இந்தியாவுடன் இணக்கத்தை ஏற்படுத்த பிரித்தானியா தீவிரம்

இந்தியாவுடனான ஸ்கொச் விஸ்கி இறக்குமதி வரி தொடர்பான சர்ச்சையைத் தீர்ப்பதற்கு பிரித்தானிய அமைச்சர்கள் அவசரமாக நடவடிக்கை எடுத்து வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

இந்தியாவுடனான ஸ்கொச் விஸ்கி இறக்குமதி வரி தொடர்பான சர்ச்சையைத் தீர்ப்பதற்கு பிரித்தானிய அமைச்சர்கள் அவசரமாக நடவடிக்கை எடுத்து வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஸ்கொச் விஸ்கி இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரி தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டைத் தீர்ப்பதற்காக இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரித்தானிய அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியா – பிரித்தானிய வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஜூலை மாதம் நடைமுறைக்கு வந்ததுடன், அதன் மூலம் ஸ்கொச் விஸ்கி மீதான இறக்குமதி வரி 150 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

எனினும், மொத்தமாக இறக்குமதி செய்யப்படும் ஸ்கொச் விஸ்கி வகைகளின் சுங்க வகைப்பாடு தொடர்பாக இந்திய அதிகாரிகள் எழுப்பியுள்ள ஆட்சேபனைகளால் இந்த வரிச் சலுகையை நடைமுறைப்படுத்துவதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

சில நிறுவனங்கள் இறக்குமதிப் பொருட்களை தவறான சுங்க வகைப்பாட்டின் கீழ் பதிவு செய்வதாக இந்திய விசாரணையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இந்த விவகாரம் இரு நாடுகளின் வர்த்தக உறவிலும் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இந்த சர்ச்சையை விரைவில் தீர்த்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில் இணக்கம் காணப்பட்ட வரிச் சலுகைகளின் அடிப்படையில் பிரித்தானிய நிறுவனங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி