செய்தி விளையாட்டு

தொடரும் தோல்வி: திணறும் இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஆ ஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஆ ஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

பேர்த்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் அதிரடிக்கு ஈடுகொடுக்க முடியாமல் 33.4 ஓவர்களில் 131 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இங்கிலாந்து அணியின் கஸ் அட்கின்சன் ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களைப் பெற்றார். ஏனைய துடுப்பாட்ட வீரர்களில் பெரும்பாலானோர் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

ஆஸ்திரேலிய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மஹ்லி பேர்ட்மன் தனது அறிமுக ஒருநாள் போட்டியிலேயே 24 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தை நிலைகுலையச் செய்தார்.

அவரது பந்துவீச்சில் இங்கிலாந்து அணித்தலைவர் ஹரி புரூக், ஜோ ரூட், டொம் பென்டன், ஜோர்டன் கொக்ஸ் மற்றும் சாம் கரன் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஆட்டமிழந்தனர்.

குறிப்பாக, தனது முதல் ஐந்து ஓவர்களில் 18 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பேர்ட்மன், ஒருநாள் அறிமுகப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஒருவரால் பெறப்பட்ட சிறந்த பந்துவீச்சுப் பெறுதியையும் பதிவு செய்தார்.

பதிலுக்கு 132 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 23.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 132 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.

ஆஸ்திரேலிய அணியின் தலைவர் மிட்செல் மார்ஷ் 29 பந்துகளில் அரைச்சதம் அடித்து 50 ஓட்டங்களைப் பெற்றார். கூப்பர் கொனொலி 27 ஓட்டங்களையும் பெற்றார்.

இதன்படி, ஆஸ்திரேலிய அணி 26.3 ஓவர்கள் மீதமிருக்க 7 விக்கெட்டுகளால் வெற்றியைத் தனதாக்கியது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அடிலெய்டில் நடைபெறவுள்ளது.

கடந்த ஐந்து போட்டிகளில் நான்கில் தோல்வியடைந்துள்ள இங்கிலாந்து அணி, இப்போட்டியில் மீண்டெழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி